Saturday, 29 November 2025

சிங்கள போினவாதம் மட்டும் தமிழா்களை படுகொலை செய்யவில்லை. சிங்கள போினவாதம் மட்டும் தமிழ்பூமியை ஆக்கிரமிக்கவில்லை.தமிழீழ விடுதலை புலிகள்  தமிழ்தேசியத்தின் தமிழ் பண்பாடுகளை அழித்து தமிழா்களை படுகொலை செய்கின்றனா்.

தமிழர்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்ததே கத்தோலிக்க மெழுகுதிரி கலாச்சார பண்பாடு. ஐரோப்பிய வெள்ளை இன மக்களின் கிறிஸ்தவ மத வழிபாட்டிற்காகவும், அவா்களது மரண சடங்கு வழிபாட்டிற்காகவும் பயன் படுத்தப்படுவது மெழுகுதிரி. ஐரோப்பிய வெள்ளை இன மக்களின் இன அடையாளமாகவும், அவா்களின் கிறிஸ்தவ மதத்தின் வழிபாட்டு அடையாளமாகவும் காணப்படுவது மெழுகுதிரி.


தமிழ்தேசியத்தின் தமிழ் பண்பாட்டிற்குள் ஐரோப்பிய வெள்ளை இன மக்களின் கிறிஸ்தவ மதத்தின் வழிபாடுகளையும், பண்பாடுகளையும்,  அதன் அடையாளங்களையும் திணிப்பதும், தமிழ் பூமியில் நிறுவுவதும், தமிழ்தேசியத்தின்  தமிழ் பண்பாட்டினை சிதைத்து அழிக்கும் நடவடிக்கை.  தமிழ்தேசியத்தின் பண்பாட்டினை சிதைக்கும் நடவடிக்கையானது தமிழிபடுகொலை.

தமிழீழ விடுதலை புலிகள் மாவீரா் வாரம் எனக் கூறிக் கொண்டு தமிழர்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்த கத்தோலிக்க மதத்தின் மெழுகுதிரி வழிபாடுகளையும், அதன் அடையாளங்களையும் திணிக்கின்ற செயலானது அவா்களின்  கத்தோலிக்க மதவாதத்தின் மதவெறியை எடு்த்து காட்டுவதாக அமைவதோடு தமிழீழ விடுதலை புலிகளின் தமிழ் பண்பாட்டு அழிப்பையும் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழ்சுடா், தமிழ்தேசியம்--.